-4.8 C
New York
Sunday, December 28, 2025

சுவிட்சர்லாந்தில் சைபர் அச்சுறுத்தல்கள் அதிகரிப்பு.

சுவிட்சர்லாந்தில் இணைய அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக, சைபர் பாதுகாப்புக்கான பெடரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், நிறுவப்பட்டதில் இருந்து சைபர் பாதுகாப்புக்கான பெடரல் அலுவலகம், சராசரியாக ஒவ்வொரு எட்டரை நிமிடங்களுக்கும் ஒரு அறிக்கையைப் பெற்றுள்ளது.

மோசடி முயற்சிகளில் கூர்மையான அதிகரிப்பு இருப்பதை இது காட்டுவதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 34,789 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று சைபர் பாதுகாப்புக்கான பெடரல் அலுவலகம், தனது அரையாண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இருந்ததை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும்.

முந்தைய ஆண்டுகளைப் போலவே, 23,104  மோசடி,  சம்பவங்கள் பதிவாகியுள்ளன.   இது மொத்த சம்பவங்களில்  மூன்றில் இரண்டு பங்காகும்.

மூலம்- Swissinfo

Related Articles

Latest Articles