17.2 C
New York
Wednesday, September 10, 2025

சூரிச் பாடசாலையில் பதற்றம்- ஆயுதங்களுடன் சூழ்ந்து கொண்ட பொலிஸ்

சூரிச்சில் உள்ள Dielsdorf  இல் பாடசாலை  ஒன்றில் துப்பாக்கிச் சூடு குறித்த  எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து பொலிசார் குவிக்கப்பட்டனர்.

இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

பாடசாலையில் துப்பாக்கிச் சூடு குறித்த எச்சரிக்கை கிடைக்கப் பெற்றதை அடுத்து பெரும் எண்ணிக்கையான பொலிசார் துப்பாக்கிகளுடன் பாடசாலையை சூழ்ந்து கொண்டனர்.

அவர்கள் ஆசிரியர்களையும் மாணவர்களையும் வகுப்பறைகளுக்குள் தங்கியிருக்குமாறும் அறிவித்தனர்.

தேடுதல்களை நடத்திய பின்னர், அது வெறும் புரளி என தெரியவந்தது,

இதனைத் தொடர்ந்து பொலிசார் அங்கிருந்து விலகிச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles