23.5 C
New York
Thursday, September 11, 2025

பேரிடர் எச்சரிக்கையை நவீனப்படுத்த திட்டம்.

மொபைல் போன் வலையமைப்பு மற்றும் பிற டிஜிட்டல்  தொடர்புசாதனங்கள்  வழியாக அனுப்பப்படும் மக்களுக்கான பேரிடர் எச்சரிக்கை அமைப்பை நவீனமயப்படுத்த பெடரல் கவுன்சில் தீர்மானித்துள்ளது.

எனினும்,  எச்சரிக்கை சைரன்களின் பாரம்பரிய அமைப்பு தொடர்ந்து இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆலோசனை வரைவை அடுத்த ஆண்டு முதல் அரையாண்டுக் காலத்தில் சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சுக்கு பெடரல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக புதிய செல்போன் விழிப்பூட்டல்கள் மற்றும் செல் ஒளிபரப்பு தொழில்நுட்பத்தின் அறிமுகம் மூலம் மக்களுக்கான பேரிடர் எச்சரிக்கை அமைப்பை மேம்படுத்த அரசாங்கம் விரும்புகிறது.

இது அனைத்து செல்போன்களுக்கும் சுமார் 500 எழுத்துகள் கொண்ட குறுந்தகவல்களை அனுப்ப அனுமதிக்கிறது.

மேலும், ஏற்கனவே 2.2 மில்லியன் பேர் பயன்படுத்தும் Alertswiss செயலி மற்றும் அதனுடன் தொடர்புடைய இணையதளம் மேலும் மேம்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், தேசிய எச்சரிக்கை அமைப்பின் முக்கிய பகுதியாக சைரன்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று பெடரல் கவுன்சில் நம்புகிறது.

இப்போது வரை, சைரன்களுக்கு கன்டோன்கள் பொறுப்பாக இருக்கின்றன.

எதிர்காலத்தில் செலவுகள் மற்றும் பொறுப்புகள் எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்பதை பாதுகாப்பு அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என்று பெடரல் கவுன்சில் தெரிவித்துள்ளது.

மூலம் -swissinfo

Related Articles

Latest Articles