-0.3 C
New York
Thursday, February 12, 2026

விசவாயுவை சுவாசித்த 26 பேர் பாதிப்பு.

Giswil  இல் உள்ள  நேற்று இரவு, கார்பன் மோனொக்சைட் விசவாயுவை சுவாசித்த 26 பேர் பாதிக்கப்பட்டனர்.

 அவர்களில் 17 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நேற்று இரவு 10:30 மணியளவில், 35 பேர் பங்கேற்ற இராப்போசன விருந்து ஒன்றில் பங்கேற்ற பலர் திடீரென மயக்கமடைந்தனர்.

ஆரம்ப விசாரணைகளின்படி, மாலை நேரத்தில் கூடாரத்தில் அதிகப்படியான கார்பன் மோனொக்சைட்  வாயு அதிகரித்துள்ளது.

இதனால் பலர் சுவாசிக்க சிரமப்பட்டு மயங்கியுள்ளனர்.

இந்த விசவாயு  எப்படிப் பரவியது என்ற விவரம் எதையும் பொலிசார் தெரிவிக்கவில்லை.

காரணத்தை கண்டறிய சூரிச் தடயவியல் நிறுவனத்துடன் இணைந்து கன்டோனல் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, ஏராளமான மீட்புப் பணியாளர்கள் அங்கு விரைந்தனர்.

ஏழு கன்டோன்களின் மீட்புச் சேவைகள், இரண்டு மீட்பு ஹெலிகொப்டர்கள் மற்றும் பல பொலிஸ் ரோந்துகளும் தீயணைப்புப் படையும் அங்கு உதவிப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

மூலம் -watson.ch

Related Articles

Latest Articles