2.9 C
New York
Friday, February 20, 2026

கணவனை கடித்து, அடித்து, குத்தி துன்புறுத்திய பெண்ணுக்கு அபராதம்.

கணவனை துன்புறுத்திய பெண் ஒருவருக்கு நீதிமன்றம், அபராதம் விதித்துள்ளது.

Basel-Landschaft  கன்டோனைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணே கணவனை துன்புறுத்திய குற்றச்சாட்டை எதிர்கொண்டிருந்தார்.

அவர் சமையலறைக் கத்தியால் கணவனைத் தாக்கியுள்ளார்.

இதனால் அவரது உடலில் 35 சென்டி மீற்றர் நீளத்திற்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது.

அந்த பெண் தனது கணவனின் தோள்பட்டையில், இரண்டு இடங்களில் கடித்துக் காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.

முதுகு மற்றும் கழுத்து பகுதியில் குத்தியும், கணவனின் முகத்தை கீறியும் காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.

அத்துடன் கணவனின் காரையும் அந்த பிரேசில் பெண் சேதப்படுத்தியுள்ளார்.

இந்த வழக்கில் அவருக்கு, 1,990 பிராங் அபராதம்  செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடும்ப வன்முறைக்கு எதிரான பயிற்சி திட்டத்திலும் பெண் பங்கேற்க வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles