டாவோஸில் உள்ள பிரமாபுல்ஸ்ட்ராஸ்ஸில் சிறுவர்கள் கொளுத்திய பட்டாசினால் கார் தீப்பற்றியது.
நேற்று மதியம் 1 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நிறுத்தப்பட்டிருந்த காரின் முன் வலது சக்கர பகுதியில் இரண்டு ஆரம்ப பள்ளி சிறுவர்கள் எரியும் தீப்பொறி பட்டாசுகளை வைத்தனர்.
சிறிது நேரம் கழித்து, அந்த வழியாக சென்றவர்கள் காரில் புகை மற்றும் தீப்பிழம்புகளை கண்டனர்.
தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன், அவர்கள் கைகளாலும் மண்வெட்டியாலும் அங்கிருந்த பனியை எறிந்து தீயை அணைத்தனர்.
கிராபண்டன் கன்டோனல் பொலிசார் சம்பவத்திற்குப் பொறுப்பான இரண்டு சிறுவர்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
அவர்கள் டாவோஸில் விடுமுறைக்காக வந்திருந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.