சூரிச் Kaufleuten கிளப் முன்பாக ஒருவரை மிருகத்தனமாக தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை அதிகாலை 2:30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.
முதற்கட்ட விசாரணையின் படி, அவர் நான்கு அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்.
பொலிசார் வருவதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சூரிச் நகர பொலிசார், 25 வயது துருக்கியரை சனிக்கிழமை கைது செய்தனர்.
சூரிச் கன்டோனல் பொலிசாரின் மேலதிக விசாரணைகளை அடுத்து, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் 25 வயதான சுவிஸ் நபர், 29 வயதான போர்த்துகீசிய நபர் மற்றும் 33 வயதான துருக்கிய நபர் ஆகியோரைக் கைது செய்தனர்.
அவர்கள் டிசம்பர் 26 அன்று Pelikanstrasse இல் அந்த நபரைத் தாக்கி பலத்த காயப்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
நான்கு பேரும் கடுமையான வன்முறைக் குற்றத்திற்காக சட்டமா அதிபர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் 30 வயதான ஜெர்மன் பிரஜை என்றும், பாதிக்கப்பட்டவரும் குற்றவாளிகளும் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் -20min.