Solothurn இல் உள்ள Baselstrasse இல் பாதசாரிக் கடவையில் கார் மோதியதில் 70 வயதுடைய பெண் பாதசாரி ஒருவர், காயம் அடைந்தார்.
நேற்றுக் காலை எட்டு மணியளவில், இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய காரை 89 வயதான பெண் ஓட்டிச் சென்றதாக Solothurn கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
காயங்களுக்குள்ளான பாதசாரி. அவசர சேவை மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்தியவரின் ஓட்டுநர் அனுமதி பத்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மூலம்- 20min.