19.8 C
New York
Thursday, September 11, 2025

e-ID திட்டத்துக்கு எதிராக மீண்டும் பொது வாக்கெடுப்பு?

மின்னணு அடையாளத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நிலை மீண்டும் ஏற்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு எதிராக வாக்கெடுப்பைக் கோரி, கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு பரவலாகி வருகிறது. சுவிஸ் மக்கள் 2021 இல் 64%  எதிராக வாக்களித்து, மின்னணு அடையாளத்தை ஏற்கனவே நிராகரித்துள்ளதாக Mass-Voll  குழு தெரிவித்துள்ளது.

மக்களின் விருப்பத்தை முற்றிலுமாக புறக்கணித்து, நாடாளுமன்றம் இன்னும் இதனை அறிமுகப்படுத்த விரும்புகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று Mass-Voll குழு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு எதிராக கையொப்ப சேகரிப்பு வியாழக்கிழமை தொடங்குகிறது.

நாடு தழுவிய வாக்கெடுப்பைத் தொடங்குவதற்குத் தேவையான 50,000 கையொப்பங்களைச் சேகரிக்க ஏப்ரல் 19 வரை அவர்களுக்கு அவகாசம் உள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles