சூரிச் நகரின் Lochergut இல் உள்ள kiosk வர்த்தக நிறுவனத்தின் மீத துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
kiosk கின் ஜன்னல் முழுவதும் துப்பாக்கி ரவைகள் துளைத்துள்ளன.
என்ன நடந்த து என்று தெரியாத நிலையில் சூரிச் நகர பொலிஸ் தடயவியல் குழு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறது.
அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு விசாரணைகள் தேடுதல்கள் நடத்தப்பட்டன.
குற்றம் நடந்த நேரம் மற்றும் பின்னணி தொடர்ந்து விசாரணை இடம்பெற்ற வருவதாகவும், தற்போதைய தகவலின்படி, யாரும் காயமடையவில்லை என்றும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மூலம்- 20min.