சூரிச்சில் உள்ள பிரதான ரயில் நிலையத்திற்கு முன்னால் நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் விபத்து ஏற்பட்டது.
லைன் 11 இல் இருந்த ட்ராம் ஒரு கார் மீது மோதியது.
எனினும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை, ஆனால் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. சேதத்தின் அளவு தெளிவுபடுத்தப்படவில்லை.
ட்ராம் மற்றும் கார் இரண்டும் முன்பக்க சேதத்தை சந்தித்ததாக படங்கள் காட்டுகின்றன.
விபத்து எப்படி நடந்தது என்பது இன்னும் விசாரணையில் உள்ளது.
விபத்தால் டிராம் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.
மூலம்- 20min.