15.8 C
New York
Thursday, September 11, 2025

பதவி விலகுகிறார் பாதுகாப்பு அமைச்சர் வயோலா அம்ஹெர்ட்.

சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர் வயோலா அம்ஹெர்ட் மார்ச் மாத இறுதியில் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவர் பெர்னில்  நடத்திய  ஊடக சந்திப்பில் இதனை இந்த தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

சிறிது காலமாகவே அவர் ராஜினாமா செய்வது குறித்து வதந்திகள் இருந்து வந்தன.

வலாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த 62 வயதான மையக் கட்சி அரசியல்வாதியான  அவர், 2019 ஆம் ஆண்டு முதல் சுவிஸ் அரசாங்கத்தில் அங்கம் வகித்து வருகிறார்.

சுவிஸ் ஜனாதிபதியாக இருந்த ஒரு வருடத்திற்குப் பிறகு அம்ஹெர்ட் பதவி விலகக்கூடும் என்று ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் மீண்டும் மீண்டும் ஊகங்கள் எழுந்தன.

பல ஆண்டுகள் அரசியலிலும் நிர்வாகத்திலும் இருந்த பிறகு, “விலக வேண்டிய நேரம் இது” என்று அம்ஹெர்ட் தனது முடிவை நியாயப்படுத்தினார்.

தனது அமைச்சு, பெடரல் கவுன்சில், சுவிட்சர்லாந்தின் நிர்வாக அமைப்பு மற்றும் நாடாளுமன்றத்திற்கு நன்றி தெரிவித்தார்.

“எல்லாம் சரியாக நடந்து விட்டது என்று நான் கூறவில்லை, இருப்பினும், “குறிப்பிடத்தக்க மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles