கிழக்கு சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் வேகமாக வாகனம் ஓட்டியதற்காக 20 ஆயிரம் பிராங் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவர் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதி வேகமாக வாகனத்தை ஓட்டியிருந்தார்.
அவருக்கு 19,500 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டதுடன். சட்டச் செலவாக 650 பிராங்குகள் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் வீதி போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டிருந்தார்.
அத்துமீறி நுழைந்ததற்கும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் செய்வதற்கும் தண்டனை பெற்றிருந்தார்.
2021 ஆம் ஆண்டில், அவருக்கு 15 மாத நன்னடத்தை தண்டனையும் 1,500 பிராங் அபராதமும் விதிக்கப்பட்டது.
மூலம்- Bluewin