6.8 C
New York
Monday, December 29, 2025

துப்பாக்கியை காட்டி மாணவர்களை அச்சுறுத்திய இளைஞர்கள்.

Lachen SZ பிராந்தியத்தில் உள்ள மூன்று தொடக்கப் பள்ளி மாணவர்களை முகமூடி அணிந்த இளைஞர்கள் தடுத்து நிறுத்தி துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியுள்ளனர்.

துப்பாக்கி போலியானதாக இருக்கலாம் என்று பள்ளி முதல்வர் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் கூறினார்.

“இந்த ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்,  இளைஞர்கள் நகைச்சுவையாக செய்திருக்கலாம்.என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து இரண்டு பேர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் என்றும்  ஆனால் இன்னும் எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை  என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் யாரும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், இருப்பினும், பொறுப்பான இளைஞர் நல அதிகாரி பள்ளிகள் மற்றும் பள்ளி சமூக சேவையாளர்களுடன் தொடர்பில் உள்ளார் என்றும் அவர் கூறினார்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles