0.8 C
New York
Monday, December 29, 2025

சுவிஸ் வங்கிகள், நகராட்சிகளின் மீது கைவரிசை காட்டிய ரஷ்ய ஹக்கர்கள்.

சுவிஸ் வங்கிகள் மற்றும் நகரசபைகளின் இணையத் தளங்களை இலக்கு வைத்து, இன்று சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சூரிச் மற்றும் Vaud கன்டோனல் வங்கிகள்,  Lucerne  இன் Adligenswil, Kriens மற்றும் Ebikon நகரசபைகளினதும், இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சைபர் தாக்குதலுக்கு ரஷ்ய ஹேக்கர்கள் தான் காரணம் என்று நம்பப்படுகிறது.

டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தின் மாநாட்டின் போது இதுபோன்ற தாக்குதல்கள் நிகழும் என்று தேசிய சைபர் பாதுகாப்பு மையம் எதிர்பார்த்திருந்தது.

ஹக்கர்கள் இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம்,  கவனத்தை ஈர்க்க விரும்புகிறார்கள் என்று சைபர் பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்தது.

இந்த தாக்குதல்களுக்கு ரஷ்ய ஹக்கர் குழு NoName பொறுப்பேற்றுள்ளது.

அத்தகைய தாக்குதல்களின் போது தரவு கசிவு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles