Volketswil இல் நேற்று மதியம், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.
அடுக்குமாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, சூரிச் கன்டோனல் பொலிசார் சென்ற போது, 70 வயது பெண் அங்கு சிக்கியிருந்தார்.
அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அதேவேளை அருகில் வசித்த நான்கு பேர் கொண்ட குடும்பம் பல்கனி வழியாக வெளியேற்றப்பட்டது
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
மூலம்- 20min.