Valais கன்டோனில் உள்ள Vouvry இல், நேற்று கார் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது.
நேற்று மாலை 6 மணியளவில், Vouvry ரயில் நிலையத்துக்கு அருகில், இந்த விபத்து ஏற்பட்டது.
ரயில்வே கடவையில் சென்று கொண்டிருந்த கார் மீது ரயில் மோதிய போதும் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
காரை ஓட்டிய 78 வயதுடைய பெண், ரயில்வே கடவையில் கார் நின்றதும், அதிலிருந்து வெளியேறியதால் காயமின்றி தப்பினார்.
ரயில் ஓட்டுநர் உடனடியாக அவசரகால பிரேக்கைப் பயன்படுத்தியதால் அதிக பாதிப்பு ஏற்படவில்லை.
ரயிலில் இருந்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
மூலம்- 20min.