-2.7 C
New York
Wednesday, December 31, 2025

அகதிகள் தங்குமிடமாகிறது முன்னாள் ஹோட்டல்.

Katzenbachstrasse இல் உள்ள முன்னைய Hotel Landhus இல், பாதிக்கப்படக் கூடிய 80 புகலிடக் கோரிக்கையாளர்கள் இடம்பெயர்வுக்கான மாநிலச் செயலகத்தினால் (SEM) தங்க வைக்கப்படவுள்ளனர்.

2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல்,  இவர்கள் தங்க வைக்கப்படுவார்கள் என SEM மற்றும் சூரிச் நகரம் என்பன அறிவித்தன.

இந்த வாடகை ஒப்பந்தம் 2029 ஆம் ஆண்டின் இறுதி வரை மட்டுமே.

இரண்டு மாடி கட்டிடத்தில் 80 பேர் வரை தங்குவதற்கு மொத்தம் 23 அறைகள் உள்ளன.

அவர்களைக் கவனித்துக் கொள்வதற்கு சூரிச் தஞ்ச அமைப்பு (AOZ) பொறுப்பாகும்.

பாதுகாப்பு சேவைகளை Protectas AG வழங்குகிறது.

SEM இன் படி, Hotel Landhus இல்,  தங்கியுள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சூரிச்சில் உள்ள பெடரல் அகதி மையத்தைச் சேர்ந்த குழந்தைகள் படிக்கும் பள்ளியில் பயில்வார்கள்.

சூரிச் நகரத்தின் சமூகத் துறை இந்த திட்டத்தை மேற்பார்வையிடும்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles