சூரிச் மற்றும் ஷாஃப்ஹவுசனில் உள்ள சூதாட்ட விடுதிகளில், ஏடிஎம் குண்டுவெடிப்புகளால் நிறம் மாறிய நாணயத்தாள்கள் புழக்கத்திற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட நாணயத்தாள்களை அங்கு எளிதாக வெள்ளையாக்க முடியும்.
ஹொலன்டை சேர்ந்த இளைஞர்கள் சூதாட்ட விடுதிகளில் கொள்ளை-தடுப்பு மையால் குறிக்கப்பட்ட நாணயத் தாள்களை பெரியளவில் மாற்ற முயன்றுள்ளனர்.
அவர்கள் ஏடிஎம். இயந்திரங்களில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை கழுவி சுத்தமான தாள்களாக மாற்றியுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் ஏடிஎம் தாக்குதல்களின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
2022 ஆம் ஆண்டின் இறுதியில் பாசல் பகுதியில் செய்தது போல், குற்றவாளிகள் பெரிய அளவிலான பணத்தைத் திருடுகிறார்கள்.
Aesch இல் நடந்த இரண்டு ஏடிஎம் குண்டுவெடிப்புகளில் 400,000 பிராங் மதிப்புள்ள பணம் திருடப்பட்டது. குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை.
Aesch குண்டுவெடிப்புகளுக்கு சில நாட்களுக்குப் பிறகு, இரண்டு இளைஞர்கள் சுவிஸ் கசினோ சூரிச்சில் அழுக்கு நாணயத்தாகளை மாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு டச்சுக்காரர்களும் பல்வேறு இயந்திரங்களில் ரொக்கமில்லா அட்டைகளில் 19,000 பிராங்குகளை வைப்புச் செய்தனர். சிறிது சூதாட்டத்தில் ஈடுபட்டனர், அதன் பிறகு சிறிது நேரத்தில் மீதமுள்ள 18,500 பிராங்குகளை மீண்டும் கட்டணங்களில் செலுத்தினர்.
இந்த நடைமுறை மிகவும் சிறப்பாக செயல்பட்டதால், இருவரில் ஒருவர் மறுநாள் திரும்பி வந்து 53,800 பிராங்குகளை மாற்றினார்.
கசினோ ஷாஃப்ஹவுசனில் நிறமாற்றம் செய்யப்பட்ட தாள்களை இயந்திரம் ஏற்றுக்கொள்ளவில்லை. சூரிச்சில் மூன்றாவது முயற்சி இறுதியாக தோல்வியடைந்ததுடன் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
20 வயதான முக்கிய குற்றவாளிக்கு இப்போது பெடரல் குற்றவியல் நீதிமன்றம் 15 மாத நிபந்தனை சிறைத்தண்டனை விதித்து, ஐந்து ஆண்டுகள் நாட்டில் இருக்கத் தடை விதித்துள்ளது.
மூலம் – bluewin