ஜெர்மன் நிறுவனமான இசார் ஏரோஸ்பேஸின் ஸ்பெக்ட்ரம் ரொக்கட் ஏவப்பட்ட 30 செக்கன்களில் கடலில் விழுந்துள்ளது.
இந்த ரொக்கட் ஏவும் காட்சி நேற்று இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
வானிலை காரணமாக இதனை ஏவும் முயற்சி ஏற்கனவே பல முறை ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று மதியம் 12.30 மணிக்கு, நோர்வே விண்வெளித் தளமான ஆண்டோயில் உள்ள ஏவுதளத்திலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது.
எனினும் 30 செக்கன்கள் பயணித்த பின்னர் அது கடலுக்குள் விழுந்தது.
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான டானியல் மெட்ஸ்லர், இது மிகப்பெரிய வெற்றி என்று விவரித்தார்.
மேலும் இரண்டு ரொக்கட்டுகள் தயாரிக்கப்படுவதாகவும், இசார் ஏரோஸ்பேஸ் அடுத்த ஏவுதலுக்கு தயாராகி வருகிறது. என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சோதனை அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்தது. நாங்கள் ஒரு சுத்தமான ஏவுதலைக் கொண்டிருந்தோம், 30 செக்கன்கள் பயண நேரத்தைக் கொண்டிருந்தோம்.
எங்கள் ரொக்கட் நிறுத்த அமைப்பையும் சரிபார்க்க முடிந்ததுள்ளது.
சோதனையின் நோக்கம் முடிந்தவரை அதிகமான தரவுகளையும் அனுபவத்தையும் சேகரிப்பதாகும். இது வெற்றிகரமாக இருந்தது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது இந்த நிறுவனத்தின் முதல் ரொக்கட் ஆகும்.
மூலம் – Bluewin