Aargauவில் உள்ள Arni யில் ஒரு ஏடிஎம் வெடிக்க வைக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
Raiffeisenbank வங்கியின் ஏடிஎம் இயந்திரமே வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து இரண்டு அல்லது மூன்று பேர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத குற்றவாளிகளைத் தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
திருடப்பட்ட பணத்தின் அளவு தற்போது தெளிவாகத் தெரியவில்லை.
மூலம்- 20min.