சூரிச்சில் மலிவு விலையில் வீடுகள் கோரி நடந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் போன்ற நிறுவன நில உரிமையாளர்களே வாடகை அதிகரிப்புக்கு பொறுப்பாளிகள் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.
அத்துடன், அரசியல்வாதிகளுக்கும் சொத்துத் தொழிலுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆர்ப்பாட்ட அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இடதுசாரி மற்றும் தீவிர இடது குழுக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னால் இருந்தன.
தீவிர இடதுசாரிகளின் பிரதிநிதிகள் முதலாளித்துவ எதிர்ப்பு மற்றும் காவல்துறைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
Europallee அருகே, பல ஆர்ப்பாட்டக்காரர்கள் வழியில் நின்ற பொலிஸ் அதிகாரிகள் மீது பியர் கான்கள் மற்றும் தண்ணீர் போத்தல்களை வீசினர்.
அப்பகுதியில் உள்ள ஒரு கூகுள் அலுவலகம் மீது ஆர்ப்பாட்டக்கார ர்கள், பியர் கான்கள் மற்றும் பெயிற்களை வீசினர்.
சில ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவாயிலில் உள்ள ஜன்னலை சேதப்படுத்தினர்.
இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த ஆர்ப்பாட்டம், நகர மையத்தில் தொடங்கி, ரயில் நிலையம் வழியாகச் சென்று ஹெல்வெட்டியாபிளாட்ஸில் நிறைவடைந்தது.
இதனால் கார் மற்றும் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மூலம்- swissinfo