சுவிஸ் அரசாங்கம் 1.3 பில்லியன் பிராங் மதிப்புள்ள பயன்படுத்தப்படாத கோவிட்-19 தடுப்பூசிகளை குப்பைக்குள் வீசியுள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
சுவிட்சர்லாந்தினால் வாங்கப்பட்ட மருந்துகளில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
2020 மற்றும் 2023 க்கு இடையில், சுவிட்சர்லாந்து சுமார் 2.3 பில்லியன் பிராங் மதிப்புள்ள கோவிட் தடுப்பூசி மருத்துகளை வாங்கியது.
சுவிட்சர்லாந்தில் 570 மில்லியன் பிராங் மதிப்புள்ள தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டன.
மனிதாபிமான உதவியாக வெளிநாடுகளுக்கு 270 மில்லியன் பிராங் மதிப்புள்ள தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
எஞ்சிய 1.45 பில்லியன் பிராங் மதிப்புள்ள தடுப்பூசிகளில், 90வீத மானவை, காலாவதி திகதிக்குப் பின்னர் அகற்றப்பட்டுள்ளன.
இதன்மதிப்பு, 1.3 பில்லியன் பிராங்கிற்கும் அதிகமாகும்.
மூலம்- swissinfo