Aadorf நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்றுப் பிற்பகல் 2:15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ள போதும், எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
வைசென்டல்ஸ்ட்ராஸ்ஸில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள உள் முற்றம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீ மேல் அடுக்குமாடிக்கும் பரவியது.
தீயணைப்புத் துறையினர் குடியிருப்பில் வசிப்பவர்களை வெளியேற்றி தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கான சரியான காரணத்தை தீயணைப்பு புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருகிறது.
மூலம்- polizei-schweiz.ch