Seengenஇல், சைக்கிளில் சென்ற சிறுமியை மோதி விட்டுத் தப்பிச் சென்ற இளம் பெண்ணை பொலிசார் தேடி வருகின்றனர்.
நேற்று பிற்பகல் 4.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
சுமார் 20வயதுகளை உடைய பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 15 வயதுச் சிறுமி மீது மோதியது.
இந்தச் சம்பவத்தில் சிறுமி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியை மோதிய கார் நிற்காமல் தப்பிச் சென்றுள்ள நிலையில் அதனை ஓட்டிய சுமார் 20 வயதுகளை உடைய இளம் பெண்ணை Aargau கன்டோனல் பொலிசார் தேடி வருகின்றனர்.
மூலம்- 20min.