சுவிஸ் அதிகாரிகள் நீண்டதூர தாக்குதலுக்கான ஆளில்லா விமானங்களை விரைவில் வாங்கவுள்ளனர்.
கடந்த ஆண்டு சுவிஸ் பாதுகாப்புக் கொள்முதல் அலுவலகமான Armasuisse இன் Drone taskforce இனால் இதற்கான திட்டம் வரையப்பட்டுள்ளது.
இதற்கமைய அடுத்த மூன்று ஆண்டுகளில் 47 மில்லியன் பிராங் ட்ரோன்களுக்காக செலவிடப்படும்.
2027 க்குள், அசாதாரண சூழ்நிலைகளில் நீண்ட தூரத்திற்கு ஆயுதமேந்திய ட்ரோன்களை நிலைநிறுத்துவதற்கு தேவையான அறிவு மற்றும் திறன்களை நாங்கள் பெற விரும்புகிறோம் என்று ஆயுதப்படையின் துணைத் தலைவரும் UAV பணிக்குழுவின் தலைவருமான தோமஸ் ரோதாச்சர் கூறினார்.
அடுத்த ஆண்டு சோதனைகள் தொடங்கும் என்று Armasuisse உறுதிப்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கிராபண்டன் மாகாணத்தில் உள்ள வால் கிறிஸ்டல்லினா துப்பாக்கி சூடு வரம்பை இந்த நோக்கத்திற்காக பயன்படுத்த சுவிஸ் ராணுவம் திட்டமிட்டுள்ளது.
மூலம்- Swissinfo