Ostermundigen இல் கடந்த மாதம் தொழில்துறை விபத்தில் காயம் அடைந்தவர் மரணமாகியுள்ளார்.
அவர் கீழே விழுந்ததில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை இறந்தார் என பெர்ன் கன்டோனல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -

இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மார்ச் 26, 2025 புதன்கிழமை காலை 8:15 மணியளவில் இந்த விபத்து குறித்து பெர்ன் கன்டோனல் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
கட்டுமானத் தொழிலாளியான குறித்த நபர், பல மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து படுகாயமடைந்திருந்தார்.
இறந்தவர் பெர்ன் மாகாணத்தைச் சேர்ந்த 55 வயதான இத்தாலியர் ஆவார்.
மூலம்- 20min.


