0.8 C
New York
Wednesday, February 25, 2026

A2 நெடுஞ்சாலையில் பற்றியெரிந்த விநியோக வாகனம்.

A2 நெடுஞ்சாலையில் பாசல் நோக்கி சென்று கொண்டிருந்த விநியோக வாகனம் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

வியாழக்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் வாகனம் சென்று கொண்டிருந்த போது, திடீரென புகை வாசனை வந்துள்ளது.

இதையடுத்து சாரதி, சோனன்பெர்க் ஓய்வு பகுதியில் தனது வாகனத்தை நிறுத்தினார்.

தீயை அணைக்க அவர் முயன்ற போதிலும், சிறிது நேரத்திலேயே வாகனம் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது.

தீ விபத்துக்கான காரணம் தொழில்நுட்பக் காரணம் என்று நம்பப்படுகிறது.

போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதனால் A2 நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. போக்குவரத்து திருப்பி விடப்பட்டது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மூலம்- 20min

Related Articles

Latest Articles