சென் மார்கிரெதன் வெளியேறும் இடத்திற்கு அருகிலுள்ள, A1 மோட்டார் பாதையில் இரண்டு கார்கள் மோதி விபத்து ஏற்பட்டது.
நேற்று அதிகாலை 5:30 மணியளவில்,இடம்பெற்ற இந்த விபத்தில், 50 வயது ஓட்டுநர் காயங்களுக்கு உள்ளானார் என்று சென் காலன் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.
62 வயது நபர் ஒருவர் நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறிய பிறகு, நியூடோர்ஃப்ஸ்ட்ராஸ் ரவுண்டானாவை நோக்கி இடதுபுறம் திரும்ப முயன்ற போது, 50 வயது நபர் நியூடோர்ஃப்ஸ்ட்ராஸ் ரவுண்டானாவிலிருந்து சென்.காலன் நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் ஏற முயன்றார்.
அப்போது இரண்டு கார்களும் மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.