-3.3 C
New York
Sunday, December 28, 2025

சடுதியாக குறைந்த தொலைபேசிகளின் விலை – அமெரிக்க டொலரின் வீழ்ச்சியே காரணம் ?!

அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இலங்கையில் கையடக்க தொலைபேசிகளின் விலை 18% – 20% வரை குறைந்துள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார்.

டொலர் 300 ரூபா வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக கையடக்க தொலைபேசிகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் ஐபோன் 15 pro max 515000 முதல் 530000 ரூபா வரை காணப்பட்ட விலை தற்போது 375000 ரூபா வரை குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles