விமான நிலைய போர்டிங் பாஸ் சோதனைகளைத் தவிர்த்து, டிக்கெட் இல்லாமல் விமானப் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2024 ஜூனில் சூரிச் விமான நிலையத்தில் ஒரு பெண் டிக்கெட் இல்லாமல் விமானத்தில் ஏற முடிந்தது.
போர்டிங் பாஸ் வழங்கும் பணியில் இருந்த ஊழியர் சிறிது நேரம் விலகிச் சென்றபோது, அந்தப் பெண் போர்டிங் பாஸ் பெறாமல், கவுண்டரைக் கடந்து சென்றார்.
அந்தப் பெண் அம்ஸ்டர்டாமிற்கு விமானத்தில் ஏறினார்.
பாதுகாப்புப் பகுதிக்குள் அங்கீகரிக்கப்படாத நுழைவுக்காக பெடரல் சிவில் விமானப் போக்குவரத்து அலுவலகம் (FOCA) அந்தப் பெண்ணுக்கு 500 பிராங் அபராதம் விதித்தது.
அந்தப் பெண் கைது செய்யப்பட்ட போதிலும், சூரிச் பெண் சில வாரங்களுக்குப் பின்னர், மீண்டும் அதேமுறையில், பார்சிலோனா செல்ல முயன்றார்.
செல்லுபடியாகும் போர்டிங் பாஸ் வைத்திருந்த ஒருவரின் பின்னால் நெருக்கமாக நின்று அவர்களுடன் பாதுகாப்புச் சோதனைச் சாவடியைக் கடந்து சென்றார்.
இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனினும் சென்சார்கள் மற்றும் கமராக்களில் இவை கண்டறியப்படுகின்றன.
போர்டிங் பாஸ் சோதனைகளைத் தவிர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.
சூரிச் விமான நிலையத்தில், 2023 இல் ஒரு வழக்கும், 2024 இல் நான்கு வழக்குகளும், இந்த ஆண்டு மே மாத நிலவரப்படி நான்கு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மூலம்- swissinfo