2 C
New York
Monday, December 29, 2025

டக்ளஸ் தேவானந்தாவை 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கம்பஹா நீதிவான் கட்டளையிட்டுள்ளார்.

2001ஆம் ஆண்டு தனிப்பட்ட பாதுகாப்பிற்காக டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினர் வழங்கிய துப்பாக்கி ஒன்று மாகந்துர மதுஸ் என்ற பாதாள உலக குழு தலைவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, டக்ளஸ் தேவானந்தா கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று அவரை கம்பஹா நீதிவான் முன்பாக முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை, டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட 20 துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளது குறித்தும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

15 ரி-56 ரக துப்பாக்கிகளும், ஐந்து 9 மில்லி மீற்றர் கைத்துப்பாக்கிகளும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles