A1 மோட்டார் பாதை விரிவாக்கப் பணியின் போது, Solothurn க்கு அருகிலுள்ள Deitingen இல் 2,000 ஆண்டுகள் பழமையான உரோமானிய வில்லாவின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த எச்சங்கள், கி.பி 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று அதனுடன் தொடர்புடைய தொல்பொருள் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஜோனாஸ் ரைடர் என்ற தன்னார்வலர், கண்டுபிடிப்புக்கு வழிவகுத்த வேலையின் போது, செங்கல் மற்றும் கல் துண்டுகளைக் கண்டறிந்தார்.
1840 ஆம் ஆண்டில் அதே இடத்தில் ஒரு ரோமானிய குடியேற்றத்திற்கான சான்றுகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டன.
இருப்பினும், அது கவனிக்கப்படாமல் விடப்பட்டது.
1960 களில் தோல்வியுற்ற ஆய்வுகளுக்குப் பின்னர் A1 மோட்டார் பாதை விரிவாக்கத்தின் தற்போதைய பணியுடன் இந்த ஆய்வுத் தளம் மீது கவனம் திரும்பியுள்ளது.
மூலம்- 20min.