21.6 C
New York
Wednesday, September 10, 2025

சுவிசில் ஈரலுக்காக பலர் காத்திருக்க வெளிநாட்டுக்கு ஏற்றுமதி.

சுவிட்சர்லாந்தில் ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக பெருமளவிலானோர் காத்திருக்கின்ற நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் கொடையாக வழங்கப்பட்ட ஈரல் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு, சுவிட்சர்லாந்தில் 133 ஈரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

எனினும், 491 சுவிஸ் குடிமக்கள்  ஈரல் மாற்று அறுவை சிகிச்சைகளுக்காகக் காத்திருந்தனர்.

அவர்களில் 36 பேர் மாற்று ஈரல் கொடையாக கிடைக்காத நிலையில் மரணமடைந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், நாட்டில் பொருத்தமான பெறுநர்கள் இருந்தபோதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் கொடையாக கிடைத்த ஈரல்கள், வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக  அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலைமை குறித்து கவலை வெளியிட்டுள்ள நிபுணர்கள், எமக்குத் தேவை உள்ள நிலையில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles