சூரிச் விமான நிலையத்தில் நேற்றுக் காலை ஏற்பட்ட மின்சாரக் கோளாறு காரணமாக, பொதிகளை வரிசைப்படுத்தும் அமைப்பு முடங்கியது.
இதன் விளைவாக, பல விமானங்கள் அவற்றின் பொதிகள் இல்லாமல் புறப்பட வேண்டியிருந்தது என்று விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்த இடையூறு காரணமாக தாமதங்களும் ஏற்பட்டன.
பொதிகளைக் கையாளும் வசதி அமைந்துள்ள கட்டிடத்தின் சில பகுதிகளில் செயல்பாடுகள் தொடங்கியபோது மின்சாரம் தடைப்பட்டது.
இதனால் பொதிகளை எக்ஸ்ரே எடுக்கவோ அல்லது வரிசைப்படுத்தும் அமைப்பில் கொண்டு செல்லவோ முடியவில்லை. செக்-இன் அரங்குகளில் பொதிகள் குவிந்திருந்தன.
மின்சாரம் செயலிழந்ததற்கான காரணங்கள் குறித்து உள்ளக விசாரணைகள் இடம்பெறுகின்றன. காலை 6 மணிக்கு இந்த அமைப்பை மீண்டும் இயக்க முடிந்தது என்றும் விமான நிலைய பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மூலம்- swissinfo

