பாசலில், Bottmingen இல் உள்ள Fiechthagstrasse இல், வீடு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
3 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தினால் பெரும் சுவாலைகளுடனும் கரும் புகையுடனும் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.
விரைந்து செயற்பட்ட தீயணைப்பு பிரிவினர், அருகில் இருந்த கட்டடங்களுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தினர்.
இந்தச் சம்பவத்தில், காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூலம்- 20min