Lausanne இல் பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஒருவர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் பொலிஸ் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்ட 39 வயது நபர் தப்பிச் சென்றார்.
அவரை விரட்டிச் சென்ற பொலிசார் கைது செய்து, பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
சிறிது நேரத்திற்குப் பின்னர் அந்த நபர் இறந்துவிட்டார் என்று Vaud பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அவரது நாடு எமுது என்று இன்னும் தெரியவரவில்லை.
அவரது நடத்தை போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதற்கான சாத்தியங்களை சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர மருத்துவக் குழு மற்றும் துணை மருத்துவர்களின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், இரவு 10 மணியளவில் அந்த நபர் இறந்து விட்டார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மரணத்திற்கான சூழ்நிலைகளை தெளிவுபடுத்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மூலம்- 20min