பிரித்தானியாவின் லிவர்பூலில் கால்பந்தாட்ட ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, கார் ஒன்று கூட்டத்தில் வேகமாக நுழைந்ததில் 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நேற்று மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரீமியர் லீக் வெற்றி கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபட்டிருந்த போது, 53 வயதுடைய பிரித்தானிய பிரஜை ஒருவர் கூட்டத்தினர் மத்தியில் வேகமாக காரைச் செலுத்தினார்.
இதில் 4 குழந்தைகள் உள்ளிட்ட 27 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 20 பேர் காயம் அடைந்து, அந்த இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக விளக்கமளித்த பிரித்தானிய பொலிஸ் அதிகாரிகள், இது தீவிரவாத தாக்குதல் அல்ல என்று தெரிவித்துள்ளனர்.
மூலம் – பிபிசி