ஆபத்தான வேகத்தில் வாகனம் ஓட்டிய இளைஞன், இன்ஸ்டாகிராம் பதிவினால் சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.
மணிக்கு 80 கி.மீ வேகத்தில் செல்ல வேண்டிய Pfäffikon மற்றும் Wetzikon இடையேயான நெடுஞ்சாலையில், 23 வயதான அந்த நபர் 184 கிமீ வேகத்தில் பயணம் செய்துள்ளார்.
அந்தக் காட்சி படமாக்கப்பட்டு ராப் இசையுடன் சேர்த்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டது.
இந்த வீடியோவை அடையாளம் தெரியாத ஒருவர் வெட்சிகான் நகர காவல்துறைக்கு அனுப்பினார்.
பின்னர் அவர்கள் விசாரணையைத் தொடங்கி, சந்தேகத்திற்குரிய ஓட்டுநரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
கொசோவோவைச் சேர்ந்த அந்த இளைஞனுக்கு நீதிமன்றம் 18 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அதில் எட்டு மாதங்கள் கட்டாயம் சிறைத்தண்டனையும், மீதமுள்ள பத்து மாதங்கள் 4 ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 8,000 பிராங்குகள் நடைமுறை செலவுகள் விதிக்கப்பட்டன.
இருப்பினும், அந்த இளைஞனை நாடுகடத்த உத்தரவிடப்படவில்லை.
மூலம்- bluewin