ரிஹென்ரிங்கில் உள்ள ஒரு தரைத்தள அடுக்குமாடி குடியிருப்பில் வியாழக்கிழமை, கன்டோனல் பொலிசார் ஒரு சடலத்தைக் கண்டுபிடித்தனர்.
தடயவியல் பரிசோதனையின் அடிப்படையில், இந்த மரணம் ஒரு கொலை என்று சந்தேகிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர் 49 வயதுடையவர் என்று பாஸல் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சடலம் கண்டெடுக்கப்பட்ட குடியிருப்பில் இரண்டு ஆண்கள் ஒன்றாக வசித்து வந்ததாக கட்டடத்தில் வசிக்கும் இருவர் தெரிவித்தனர்.
அவர்கள் வாடகைக் குடியிருப்பாளர்கள் என்றும், அவர்கள் அரிதாகவே அங்கு இருந்தனர் என்றும், கடைசியாக மூன்று வாரங்களுக்கு முன்பு பார்த்தோம் என்றும் அவர்கள் கூறினர்.
கட்டடத்தில் வசிக்கும் மற்ற குடியிருப்பாளர்களுடன் அவர்களுக்கு மிகக் குறைந்த தொடர்புகளே இருந்தன.
அண்டை வீட்டார் விடுமுறையிலிருந்து வீடு திரும்பியபோது துர்நாற்றம் வீசியதால், பொலிசாருக்கு தகவல் கொடுத்திருந்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் வீட்டைக் கடந்து நடந்தபோது, துர்நாற்றம் வந்ததாக மற்றொருவர் தெரிவித்துள்ளார்.
அந்த நபர் உயிரிழந்து ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் இருக்கலாம், என்றும் அவர் ஊகம் வெளியிட்டுள்ளார்.
மூலம்- 20min