Gotthard சுரங்கப்பாதையில் நேற்று நீண்ட நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
நேற்றுக்காலை 10.30 மணியளவில் சுரங்கப்பாதையில் இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில், ஒரு வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனால் வடக்கு மற்றும் தெற்கு நோக்கிய பாதைகள் இரண்டும் மூடப்பட்டன.
பிற்பகல் 3.30 மணிக்குப் பின்னரே பாதைகள் மீளத் திறக்கப்பட்டன.
இதனால் தெற்கு நோக்கிய பாதையில் 10 கிலோமீற்றர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
மூலம்- bluewin