17.5 C
New York
Wednesday, September 10, 2025

பனிப்பாறை சரிவினால் இடம்பெயர்ந்த 30 பேர் வீடுகளுக்குத் திரும்பினர்.

பிளாட்டன் பகுதியில் பனிப்பாறைச் சரிவினால் இடம்பெயர்ந்த  சுமார் முப்பது குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

மே 29 அன்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள ஃபெர்டன், கிப்பல் மற்றும் வைலரில் உள்ள சில வீடுகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

வைலர் ஷொப்பிங் பகுதிக்கான வெளியேற்ற அறிவிப்பு தற்போது நீக்கப்பட்டுள்ளது.

லோன்சா ஓடையின் படுகையின் குறுக்கே பாரிய மற்றும் கட்டுப்பாடற்ற பக்கவாட்டு அரிப்பு ஏற்படும் அபாயம் இனி இல்லை அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், எந்தவொரு வெளியேற்றத்திற்கும் ஏற்பாடுகள் தயாராக உள்ளன.

இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் பள்ளத்தாக்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

கோப்பன்ஸ்டீனில் இருந்து குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான வீதி மூடல் வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் நீக்கப்படும் என்று லோட்சென்டல் பிராந்திய கட்டளை மையம் அறிவித்துள்ளது.

இருப்பினும், மலையேற்றப் பாதைகள் உட்பட பிளாட்டன் நகராட்சி முழுவதும் மூடப்பட்டிருக்கும்.

வியாழக்கிழமை, ஐஸ்டன் மற்றும் வெய்சென்ரிட் ஆகிய பிளாட்டன் குக்கிராமங்களில் வசிப்பவர்கள் ஒரு மணி நேரத்திற்கு தங்கள் வீடுகளைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

மூலம் -Swissinfo

Related Articles

Latest Articles