லௌசானில் பொலிஸ் வன்முறைக்கு எதிராக சுமார் ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடத்தினர்.
பொலிஸ் நிலையத்தில் நைஜீரியர் ஒருவர் இறந்த இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
“பொலிஸ் மீண்டும் கொலை செய்துள்ளது” என்று லௌசானில் உள்ள மான்ட்பெனான் நீதிமன்றத்திற்கு முன்னால் நடந்த பேரணியின் தொடக்கத்தில் ஒருவர் கூறினார்.
அண்மைய ஆண்டுகளில் வௌட் மாகாணத்தில் பொலிஸ் நடவடிக்கைகளின் விளைவாக, மேலும் நான்கு கறுப்பின ஆண்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் அது “ஒரு இனவெறி பொலிஸ் நிறுவனம்” என்றும் அவர் உரையாற்றினர்.
போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் பொலிசார் அவரைக் கைது செய்த பின்னர், மே 25ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த 39 வயதான நபரின், மரணத்திற்குப் பின்னர், இதுபோன்ற ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருப்பது இது மூன்றாவது முறையாகும்.
அவரது மரணத்தைத் தொடர்ந்து, வௌட் மாகாண அரசு வழக்கறிஞர் அலுவலகம், அலட்சியத்தால் ஏற்பட்ட கொலை என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
கூட்டுச் சதி அபாயத்தைக் குறைப்பதற்காக விசாரணையை மற்றொரு கன்டோனின் அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு மாற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர்.
மூலம்- Bluewin