15.7 C
New York
Monday, September 8, 2025

பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு- 9 பேர் பலி.

ஒஸ்ரியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் வியன்னாவில் இருந்து 200 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள, Graz நகரின் Dreierschützengasse உயர்நிலைப் பாடசாலையில் இன்று முற்பகல் 10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலைக்குள் நுழைந்து துப்பாக்கி ஏந்திய ஒருவர் கண்டபடி சுட்டு விட்டு தப்பிச் சென்று கழிப்பறைக்குள் தன்னைத் தானே சுட்டுக் கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் துப்பாக்கி தாரி என 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்று Graz நகர மேயர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த 28 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், 4 பேரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles