சூரிச் இலக்கத் தகடு கொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்று, யூரியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்தவர் உயிரிழந்துள்ளார்.
ஒப்ஃப்ளூ அருகே, இந்த விபத்து இடம்பெற்றதாக யூரி கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.
20 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒரு தூண் கல்லில் மோதி தூக்கி வீசப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணமானார்.
சஸ்டன் சாலை சுமார் மூன்றரை மணி நேரம் மூடப்பட்டிருந்தது.
மூலம் – 20min.