ஏஷரிலிருந்து சீல்ப்சிக்கு இறங்கும்போது கீழே விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அப்பென்செல் இன்னர்ஹோடன் கன்டோனல் காவல்துறை இதனை அறிவித்துள்ளது.
திங்கட்கிழமை, பிற்பகல் 2 மணியளவில், அவர் ஏஷரிலிருந்து சீல்ப்சி நோக்கி மலைப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவர் “டர்ஷ்ரென்னென்” பகுதியில் சுமார் 1.5 மீட்டர் அகலமுள்ள பாதையில் இருந்து விலகி, செங்குத்தான நிலப்பரப்பில் சுமார் 70 மீட்டர் கீழே விழுந்தார்.
இந்தச் சம்பவத்தில் ஒஸ்ரியாவில் வசிக்கும் அந்தப் பெண் அந்த இடத்திலேயே மரணமானார்.
மூலம் – 20min.