ஜெனிவாவிலும் லொசானிலும் பலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் ரயில் பாதையில் இறங்கிப் போராட்டம் நடத்தியதால், இன்று ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை, பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் தண்டவாளத்தில் இறங்கி ரயில் நிலையங்களில் ரயில்களை மறித்தனர்.
ஜெனீவாவில் மாலை 6 மணியளவிலும், இரவு 8 மணியளவில் லொசானிலும் இந்தப் போராட்டங்கள் இடம்பெற்றன.
இந்த ஆர்ப்பாட்டங்கள் இன்றைய ரயில் போக்குவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.
மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள அனைத்து ரயில் சேவைகளிலும் சேவை தடைப்பட்டுள்ளது என்று SBB தனது வலைத்தளத்தில் அறிவித்தது.
ஆர்ப்பாட்டங்கள் காரணமாக, நேற்று மாலை ரயில்கள் அந்தந்த இடங்களை அடைய முடியவில்லை.”
இதனால், பல ரயில்கள் குறைக்கப்பட்ட பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன.
எனவே, பயணத்திற்கு முன் இணையத்தில் கால அட்டவணையை அவதானிக்குமாறு SBB பரிந்துரைத்துள்ளது.
மூலம் – 20min.