15.4 C
New York
Tuesday, September 9, 2025

வானொலி,தொலைக்காட்சி உரிமக் கட்டணங்களை குறைக்கும் யோசனை நிராகரிப்பு.

வானொலி மற்றும் தொலைக்காட்சி உரிமக் கட்டணங்களை குறைக்கும் திட்டத்தை சுவிஸ் பிரதிநிதிகள் சபை, நிராகரித்துள்ளது.

தற்போது ஆண்டுதோறும் அறவிடப்படும் 335  பிராங் உரிமக் கட்டணத்தை 200 பிராங் ஆகக் குறைக்கும் திட்டம் பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்டது.

வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு எதிராக 116 வாக்குகளும், ஆதரவாக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 2 பேர் வாக்களிக்கவில்லை.

செனட் சபையிலும் இந்த  முன்மொழிவு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles