24.9 C
New York
Tuesday, March 31, 2026

உலகத் தரவரிசை- இழந்த இடத்தை மீளப் பிடித்தது சுவிஸ்

உலகின் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த நாடாக சுவிட்சர்லாந்து மீண்டும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மைய ஆண்டுகளில் நோர்டிக் மற்றும் ஆசிய போட்டியாளர்களிடம்  இழந்திருந்த பெருமையை சுவிஸ் மீளப் பெற்றுள்ளது.

லொசானை தளமாகக் கொண்ட ஐஎம்டி வணிகப் பாடசாலையின் வருடாந்த ஆய்வின்படி,  அண்மைய உலக போட்டித்திறன் தரவரிசையில் சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்து, சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங்கை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திற்குப் பின் தள்ளியுள்ளது.

பெருநிறுவன போட்டித்திறன் மற்றும் மக்ரோ பொருளாதார போட்டித்தன்மை அடிப்படையில் சுவிஸ் முறையே 6வது மற்றும் 13வது இடத்தில் இருந்தாலும், உள்கட்டமைப்பு மற்றும் அரசியல் சூழலில் அது முதலிடத்தில் உள்ளது என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் 67 பொருளாதாரங்களின் பொருளாதார செயல்திறன் மற்றும் நிறுவன வலிமையை ஒப்பிட்டு இந்த தரவரிசைப்படுத்தல் இடம்பெறுகிறது.

கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

இந்த ஆண்டு சுவிட்சர்லாந்தின் முதலிடத்தைப் பிடித்தமைக்கு நிலையான அரசியல் கட்டமைப்புகள், திறமையான நிர்வாகம் மற்றும் முதல் தர உள்கட்டமைப்பு ஆகியனவே முக்கிய காரணிகள் ஆகும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles