15.7 C
New York
Monday, September 8, 2025

இஸ்ரேல்- ஈரான் போர் குறித்து கவலை வெளியிட்டது சுவிஸ்.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்கள் குறித்து சுவிட்சர்லாந்து கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

அனைத்து தரப்பினரும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடித்து மேலும் மோதலைத் தவிர்க்குமாறு  கேட்டுக்கொள்வதாக சுவிட்சர்லாந்து வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூன் 13 முதல் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான ஆபத்தான மோதலால் சுவிட்சர்லாந்து மிகவும் கவலையடைந்துள்ளது, இதில் அமெரிக்காவின் இன்றைய தாக்குதல்களும் அடங்கும்,” என்று வெளியுறவு அமைச்சு இன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

பொதுமக்களையும் பொதுமக்களின் உள்கட்டமைப்பையும் பாதுகாக்கவும், தாமதமின்றி இராஜதந்திர வழிமுறைக்குத்  திரும்பவும் அனைத்து தரப்பினரையும் சுவிஸ் வெளியுறவு அமைச்சு  வலியுறுத்தியுள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles